spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅண்ணாமலை மீது பாஜக முன்னாள் நிர்வாகி புகார்

அண்ணாமலை மீது பாஜக முன்னாள் நிர்வாகி புகார்

-

- Advertisement -

அண்ணாமலை மீது பாஜக முன்னாள் நிர்வாகி புகார்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி அண்ணாதுரை போலீசில் புகார் அளித்துள்ளார்.

நானும் துலாவிப்பார்த்தேன்; முதல்வர் வாயை திறக்கவே இல்லை - அண்ணாமலை தாக்கு

கோவை உள்ளிட்ட இடங்களில் பழைய சோறு டாட்காம் என்ற பெயரில் உணவகம் நடத்தி வருபவர் அண்ணாதுரை. கோவை சாய்பாபா காலனியில் உள்ள தனது உணவகத்தை அபகரித்து பாஜக அலுவலகம் நடத்துவதாக அண்ணாதுரை கோவை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். தான் வாடகைக்கு எடுத்திருந்த உணவகத்தை அபகரித்து பாஜக சேவை மையம் தொடங்கியிருப்பதாகவும், வழக்கு நிலுவையில் உள்ளபோதே தனது உணவகத்தில் இருந்த பொருட்களை பாஜகவினர் அள்ளிச் சென்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தனது உணவகம் அபகரிக்கப்பட்டதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நேரடியாக தொடர்பு இருப்பதாக அண்ணாதுரை புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ