Homeசெய்திகள்க்ரைம்அம்பத்தூர் பகுதியில் அடுத்தடுத்து 3 கோவில்களில் கொள்ளை – பீகார், திருநெல்வேலியைச் சேர்ந்த இருவர் கைது;...

அம்பத்தூர் பகுதியில் அடுத்தடுத்து 3 கோவில்களில் கொள்ளை – பீகார், திருநெல்வேலியைச் சேர்ந்த இருவர் கைது; ரூ.14 லட்சம் வெள்ளிப் பொருட்கள், ரூ.2 லட்சம் ரொக்கம் பறிமுதல்!

-

- Advertisement -

சென்னை அம்பத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து மூன்று கோவில்களில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக, பீகார் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இருவரைத் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.அம்பத்தூர் பகுதியில் அடுத்தடுத்து 3 கோவில்களில் கொள்ளை – பீகார், திருநெல்வேலியைச் சேர்ந்த இருவர் கைது; ரூ.14 லட்சம் வெள்ளிப் பொருட்கள், ரூ.2 லட்சம் ரொக்கம் பறிமுதல்!

அவர்களிடமிருந்து சுமார் ரூ.14 லட்சம் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

we-r-hiring

மூன்று கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளை!

அம்பத்தூர் அயப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு கோவில், சிக்னல் அருகே அமைந்துள்ள அம்மன் கோவில் மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டை டைனிங் சென்டர் முதலாவது தெருவில் உள்ள ஸ்ரீ ஐஸ்வர்ய விநாயகர் கணபதி ஆலயம் என மூன்று கோவில்களில் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்றன.

குறிப்பாக, ஸ்ரீ ஐஸ்வர்ய விநாயகர் கோவிலில் உண்டியலில் இருந்த பணத்தைத் தொடாமல், சுமார் 7 கிலோ எடையுள்ள வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். அவற்றின் மதிப்பு சுமார் ரூ.14 லட்சம் எனக் கூறப்படுகிறது.

தனிப்படை அமைத்து விசாரணை!

தொடர் கொள்ளைச் சம்பவங்கள் குறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். கோவில்களில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக கிடைத்த தகவல்கள் மற்றும் விசாரணையின் அடிப்படையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சிவலிங்கம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

வெள்ளிப் பொருட்கள், ரூ.2 லட்சம் ரொக்கம் பறிமுதல்!

கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்படும் வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

அம்பத்தூர் பகுதியில் அடுத்தடுத்து மூன்று கோவில்களில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அரசு மருத்துவமனையில் நோயாளியிடம் நகை திருடிய செவிலியர் கைது – 2¼ சவரன் தங்க நகைகள் மீட்பு!

MUST READ