Homeசெய்திகள்மாவட்டம்வாணியம்பாடியில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் அமைக்கக் கோரி வழக்கறிஞர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் –...

வாணியம்பாடியில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் அமைக்கக் கோரி வழக்கறிஞர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் – பல்வேறு அமைப்பினர் பங்கேற்று ஆதரவு!

-

- Advertisement -

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தி, வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வாணியம்பாடியில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் அமைக்கக் கோரி வழக்கறிஞர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் – பல்வேறு அமைப்பினர் பங்கேற்று ஆதரவு!

இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வணிகர் சங்கத்தினர், அனைத்து அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், விவசாய சங்கத்தினர், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

வாணியம்பாடி அரசினர் தோட்ட வளாகத்தில் 125 ஆண்டுகளுக்கும் மேலாக குற்றவியல் நடுவர் நீதிமன்றமும், 31 ஆண்டுகளாக மாவட்ட உரிமையியல் நீதிமன்றமும், 17 ஆண்டுகளாக சார்பு நீதிமன்றமும் செயல்பட்டு வருகின்றன.

மேலும், வாணியம்பாடியில் மாவட்ட வருவாய் அலுவலகம், பழமையான கருவூலம், வனச்சரக அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசு அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன.

குறிப்பாக, வாணியம்பாடி நீதித்துறை எல்லைக்குட்பட்ட பகுதியில் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 8 காவல் நிலையங்கள் உள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், மலைப்பகுதி மக்களும் நேரடி பேருந்து வசதி மூலம் வாணியம்பாடிக்கு எளிதில் வந்து செல்ல முடிவதாகக் கூறுகின்றனர்.

இங்கு கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் அமைக்கப்பட்டால், வழக்காடிகள், பொதுமக்கள், காவல்துறையினர் மற்றும் வழக்கறிஞர்களின் பயண நேரமும் செலவும் குறையும் என்றும், வழக்குகள் விரைந்து விசாரிக்கப்படுவதற்கும் வழிவகுக்கும் என்றும் வழக்கறிஞர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு வாணியம்பாடியிலேயே கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் அமைக்க தமிழக அரசும், நீதித்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக வணிகர் சங்கத்தினர், அனைத்து அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், விவசாய சங்கத்தினர், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்று தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

தேக்கம்பட்டி சிறையில் கைதிகள் சித்ரவதை செய்யப்படுகிறார்களா? – தப்பியோடிய கைதி வெளியிட்ட வீடியோவைத் தொடர்ந்து மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் நேரில் விசாரணை!

MUST READ