
கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை இன்று (மே 27) விரிவாக்கம் செய்யப்பட்டது. இன்று காலை 11.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், 24 சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு அம்மாநில ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பின்னர், முதலமைச்சர் மற்றும் ஆளுநருடன் அனைத்து அமைச்சர்களும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காத முதலமைச்சர்கள்!
இதனால் கர்நாடக அமைச்சரவையின் எண்ணிக்கை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருடன் சேர்த்து 34 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், அனைத்து அமைச்சர்களுக்கும் துறைகளை ஒதுக்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஆளுநர் மாளிகை.

அதன்படி, முதலமைச்சர் சித்தராமையாவுக்கு நிதித்துறையும், துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு நீர்ப்பாசனத்துறையும், பெங்களூரு வளர்ச்சித்துறையும், அமைச்சர் பிரியங்க் கார்கேவுக்கு பஞ்சாயத்துராஜ் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் துறையும், எச்.கே.பாட்டீலுக்கு சட்டத்துறையும், அமைச்சர் பரமேஸ்வராவுக்கு உள்துறையும், ராமலிங்கா ரெட்டிக்கு போக்குவரத்துத்துறையும், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு சுகாதாரத்துறையும், மது பங்காரப்பாவுக்கு பள்ளிக்கல்வித்துறையும், சரண் பிரகாஷ் பாட்டீலுக்கு உயர்கல்வித்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


