Homeசெய்திகள்திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க முடியாது; தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய...

திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க முடியாது; தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ செல்லசாமி வலியுறுத்தல்!

-

- Advertisement -

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஏற்புடையதல்ல என்றும், தமிழக அரசு உடனடியாக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும், பத்மநாபபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செல்லசாமி தெரிவித்துள்ளார்.திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க முடியாது; தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ செல்லசாமி வலியுறுத்தல்!

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருப்பரங்குன்றம் வழக்கில் இத்தகைய தீர்ப்பு வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இப்படி ஒரு தீர்ப்பு வந்திருக்கக் கூடாது. இடைக்கால நிவாரணம் என்று கூறுவதுகூட தவறானது.

இடைக்காலத் தீர்ப்பின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தூணில் தீபம் ஏற்ற அனுமதிப்பது, எதிர்காலத்தில் புதிய பிரச்சினைகளை உருவாக்கக்கூடும். எனவே, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு சரியானதாக இல்லை என்பது எங்களது கருத்து. தமிழக அரசு உடனடியாக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.

தவெக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியில் இருந்துதான் ஆதரவு அளித்து வருகிறது. அரசு பல்வேறு நலத்திட்டங்களை மானியக் கோரிக்கைகள் மற்றும் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளது.

அதே நேரத்தில் வேலைவாய்ப்புகளில் அவுட்சோர்சிங் முறையையும், தனியார்மயத்தையும் கொள்கை ரீதியாக அறிவித்துள்ளது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்த்துள்ளது. அரசு வேலைகளைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

தாமஸ் குரியன் குழுவைக் கலைத்தது தவறான நடவடிக்கை என்பதுதான் எங்களது நிலைப்பாடு. தவெக அரசின் அரசியல் செயல்பாடுகளில் என்ன நடக்கிறது என்பது உறுதியற்ற நிலையில் இருப்பதால், அவர்கள் திரும்பத் திரும்ப கேட்டபோதும் நாங்கள் ஆட்சியில் பங்கு பெறவில்லை.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நீதிமன்றத் தீர்ப்புகள் நீதி சார்ந்ததாக அமைவது குறைந்து வருவது கவலை அளிக்கிறது – கே. சுப்பராயன் எம்.பி. கருத்து!

MUST READ