Homeசெய்திகள்தமிழ்நாடுவிஜய்யைப் பார்க்கச் சென்றவர்களுக்கு ரூ.20 லட்சம்; வாழ்வாதாரத்திற்காகக் கடலுக்குச் சென்ற மீனவர்களுக்கு ரூ.7 லட்சமா?” –...

விஜய்யைப் பார்க்கச் சென்றவர்களுக்கு ரூ.20 லட்சம்; வாழ்வாதாரத்திற்காகக் கடலுக்குச் சென்ற மீனவர்களுக்கு ரூ.7 லட்சமா?” – ஜெயக்குமார் ஆவேசம்!

-

- Advertisement -

‘முரசு’ புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், அரசு வேலை வழங்க வேண்டும், ஆந்திர கடலோரக் காவல் படையால் சிறைபிடிக்கப்பட்ட 8 விசைப்படகுகளை மீட்டுத் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.விஜய்யைப் பார்க்கச் சென்றவர்களுக்கு ரூ.20 லட்சம்; வாழ்வாதாரத்திற்காகக் கடலுக்குச் சென்ற மீனவர்களுக்கு ரூ.7 லட்சமா?” – ஜெயக்குமார் ஆவேசம்!

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களை அதிமுக முன்னாள் அமைச்சரும், முன்னாள் மீன்வளத் துறை அமைச்சருமான ஜெயக்குமார் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

‘முரசு’ புயலில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரண நிதி வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இன்று மீனவர்களின் நிலை மிகவும் பரிதாபமாகவும், மோசமாகவும் உள்ளது. அரசின் செயல்பாடுகள் வேதனையளிக்கின்றன.

அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரண நிதியும், அரசு வேலையும் வழங்கினோம். அப்படியிருக்கும்போது, தற்போதைய அரசு ஏன் மீனவர்களுக்கு அதேபோன்ற நிவாரணத்தை வழங்க மறுக்கிறது?

கரூரில் விஜய்யைப் பார்க்கச் சென்றவர்களுக்கு ரூ.20 லட்சம் வழங்கப்படுகிறது. ஆனால், வயிற்றுப் பிழைப்புக்காகக் கடலுக்குச் சென்ற மீனவர்களின் குடும்பங்களுக்கு ரூ.7 லட்சம்தானா? அதுவும் மீனவர்கள் நல வாரியத்தின் நிதியிலிருந்துதான் வழங்கப்படுகிறது. அரசின் நிதி எங்கே? அரசு வேலை எங்கே? ‘முரசு’ புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அரசு ஒரு ரூபாய்கூட நிவாரணமாக வழங்கவில்லை.

மீனவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களைச் சந்திக்க ஒரு நாளாவது சம்பந்தப்பட்ட அமைச்சர் வந்தாரா? மீனவர்களைத் தேடுவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? கடலோரக் காவல் படை சென்றதா என்று கேட்டால், ரகசியம் என்கிறார்கள்.

அதிகார போதையில், மக்கள் எது நடந்தாலும் கேள்வி கேட்க மாட்டார்கள், தங்களைப் பார்த்தால் வாக்களித்துவிடுவார்கள் என்ற மமதையிலும் இறுமாப்பிலும் முதலமைச்சர் விஜய் இருக்கிறார். இந்த ஆட்சிக்கு விரைவில் மூடுவிழா நடத்த வேண்டிய நிலை வரும்.

கண்ணதாசன் அன்றே பாடியதுபோல, அழகாக இருக்கும் காஞ்சிரம் பழங்கள் சந்தையில் விற்காது. வெங்காயத்தை உரித்துப் பார்த்தால் ஒன்றும் இருக்காது. அதுபோலத்தான் தவெக ஆட்சியும் இருக்கிறது.

விஜய்யைப் பார்த்தால் மக்கள் வாக்களித்துவிடுவார்கள் என்று நினைக்கிறார்கள். எல்லா நாளும் அமாவாசைச் சோறு கிடைக்காது. இதன் விளைவு வரும் தேர்தலில் தெரியும். இந்தக் கட்சி மோசமான நிலைக்குச் செல்லும்.

இன்றைக்கு லஞ்சம் ஒழிந்துவிட்டதா? லஞ்சம் இரட்டிப்பாகிவிட்டது. நவீன முறையில் லஞ்சம் அதிகரித்துள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் கொடுமைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. செஞ்சி சிறுமியை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. சிறை மரணங்கள் நடைபெறுகின்றன. காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. எதைப்பற்றியும் கவலைப்படாத அரசாக தவெக அரசு செயல்படுகிறது.

அமைச்சர் ஸ்ரீநாத் அமைதியாக இருப்பது குறித்த கேள்விக்கு, அவர் எப்போது மவுன சாமியார் ஆனார் என்று எனக்குத் தெரியவில்லை. தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழி. விஜய் எப்படி வாய் திறப்பதில்லையோ, அதேபோல மீன்வளத் துறை அமைச்சரும் வாய் திறப்பதில்லை. அனைத்துக் கேள்விகளுக்கும் இரண்டு அமைச்சர்கள்தான் பதில் சொல்வார்கள்” என ஜெயக்குமார் தெரிவித்தார்.

மீனவர்களின் நிவாரணக் கோரிக்கைகள், சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகுகளை மீட்கும் நடவடிக்கை மற்றும் அரசு வேலை வழங்குவது தொடர்பாக ஜெயக்குமார் முன்வைத்த விமர்சனங்கள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.

தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம் – மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர் கோரியது மாநில நெடுஞ்சாலை ஆணையம்!

MUST READ