Homeசெய்திகள்சென்னைகாசிமேடு மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஞாயிற்றுக்கிழமையில் வெறிச்சோடிய மீன் சந்தை – 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள்...

காசிமேடு மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஞாயிற்றுக்கிழமையில் வெறிச்சோடிய மீன் சந்தை – 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தம்!

-

- Advertisement -

ஆந்திர மாநில காவல்துறையினரால் சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகுகளை மீட்க வேண்டும், புயலில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை காசிமேடு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.காசிமேடு மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஞாயிற்றுக்கிழமையில் வெறிச்சோடிய மீன் சந்தை – 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தம்!

இதன் காரணமாக, வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் திருவிழா போல் களைகட்டும் காசிமேடு மீன் சந்தை இன்று வாடிக்கையாளர்கள் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.

ஆந்திர மாநில கடலோரக் காவல்துறையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 8 விசைப்படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பது மீனவர்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.

நீதிமன்ற உத்தரவு மற்றும் ஆந்திர மீன்வளத்துறை ஆணையரின் அறிவுறுத்தல் இருந்தபோதிலும், இதுவரை படகுகள் விடுவிக்கப்படவில்லை எனக் கூறி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.காசிமேடு மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஞாயிற்றுக்கிழமையில் வெறிச்சோடிய மீன் சந்தை – 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தம்!

மேலும், அண்மையில் வீசிய முரசு புயலில் சிக்கி உயிரிழந்த 9 மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், புயலால் சேதமடைந்த படகுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மீனவர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

இந்தக் காலவரையற்ற வேலைநிறுத்தம் காரணமாக காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால், மீன் சந்தைக்கு வழக்கமான மீன் வரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை முதலே சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களும், சில்லறை வியாபாரிகளும் மீன் வாங்குவதற்காகக் காசிமேடு சந்தையில் குவிவார்கள். ஆனால், இன்று மீன் வரத்து இல்லாததால் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் சந்தை வளாகம் வாடிக்கையாளர்கள் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.

இருப்பினும், ஏற்கெனவே பிடித்து வைக்கப்பட்ட மீன்கள் மற்றும் வெளிப்பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட மீன்களைச் சில பெண்கள் காசிமேடு சூரிய நாராயண சாலை மயானம் அருகே விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் சாலையோர மீன் விற்பனை அதிகரித்து போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

8 விசைப்படகுகளை மீட்க வேண்டும்; புயலில் உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம்! – காசிமேட்டில் காலவரையற்ற வேலைநிறுத்தம்

MUST READ