Homeசெய்திகள்மாவட்டம்ஓட்டப்பிடாரம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – பொறியியல் கல்லூரி மாணவர்...

ஓட்டப்பிடாரம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – பொறியியல் கல்லூரி மாணவர் பலி; தாய் உட்பட இருவர் தீவிர சிகிச்சை!

-

- Advertisement -

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் உயிரிழந்தார். அவரது தாய் உட்பட இருவர் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஓட்டப்பிடாரம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – பொறியியல் கல்லூரி மாணவர் பலி; தாய் உட்பட இருவர் தீவிர சிகிச்சை!

குலசேகரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தராஜின் மனைவி முத்துமாரி (45). இவரது மகன் யுவன் சங்கர்ராஜா (18), திருநெல்வேலியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு யுவன் சங்கர்ராஜா தனது இருசக்கர வாகனத்தில் தாய் முத்துமாரியை அழைத்துக்கொண்டு தூத்துக்குடி நோக்கிச் சென்றுள்ளார்.

அதே நேரத்தில், நைனார்புரம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் (30) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் புதியம்புத்தூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். சில்லாநத்தம் கிராமத்தின் மேற்குப் பகுதியில் உள்ள பாலம் அருகே இரு வாகனங்களும் எதிரெதிரே வந்தபோது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் இரண்டு இருசக்கர வாகனங்களின் முன்பகுதிகளும் முற்றிலும் சேதமடைந்தன.

விபத்தில் யுவன் சங்கர்ராஜா, அவரது தாய் முத்துமாரி மற்றும் லட்சுமணன் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் மூவரும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருப்பினும், சிகிச்சை பலனின்றி யுவன் சங்கர்ராஜா இன்று அதிகாலை உயிரிழந்தார். மற்ற இருவருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் பெட்ரோல் பங்கில் பயங்கர விபத்து: தரைமட்டத் தொட்டியின் இரும்பு மூடி பறந்து தாக்கியதில் ஆட்டோ ஓட்டுநர் பலி – 3 ஊழியர்களிடம் போலீசார் விசாரணை!

MUST READ