Homeசெய்திகள்மாவட்டம்குன்னூரில் கனமழை - 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு!

குன்னூரில் கனமழை – 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு!

-

- Advertisement -

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் பெய்து வரும் கனமழையால், பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.குன்னூரில் கனமழை - 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு!

தொடர் மழை காரணமாக அப்பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், குன்னூரைச் சுற்றியுள்ள மேட்டுப்பாளையம் சாலை, சப்ளை டிப்போ, லீக் சாலை, ஆர்டர்லி சாலை மற்றும் கோத்தகிரி சாலை உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்து சாலைகளின் குறுக்கே விழுந்தன. இதனால் அந்த வழித்தடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று, இயந்திரங்களின் உதவியுடன் சாலைகளில் விழுந்திருந்த ராட்சத மரங்களை வெட்டி அகற்றினர். இதையடுத்து பாதிக்கப்பட்ட சாலைகளில் போக்குவரத்து மீண்டும் சீரானது.

குன்னூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரவக்குறிச்சி அருகே கோர விபத்து: சபரிமலையில் இருந்து திரும்பிய ஐயப்ப பக்தர்கள் 3 பேர் பலி – 8 வயது சிறுமி உட்பட 4 பேர் காயம்!

MUST READ