கன்னியாகுமரி மாவட்டம் மஞ்சாலுமூடு பகுதியில் வீட்டில் தனியாக வசித்து வந்த ஓய்வுபெற்ற ஆசிரியை ஷோபாவைக் கட்டிப்போட்டு, 15 சவரன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் செல்போனை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் தனியாக இருந்த ஷோபாவை மர்ம நபர்கள் கட்டிப்போட்டு, அவரிடம் இருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதற்கிடையே, நேற்று மாலை கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய வேலைக்காரப் பெண், வீட்டில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இரவு சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தடயவியல் நிபுணர்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களைச் சேகரித்த போலீசார், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் தனியாக வசித்து வந்த ஓய்வுபெற்ற ஆசிரியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மஞ்சாலுமூடு பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
