spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்த மல்யுத்த வீரர்கள்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்த மல்யுத்த வீரர்கள்!

-

- Advertisement -

 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்த மல்யுத்த வீரர்கள்!
Photo: Amit Shah

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ள வீராங்கனைகள், ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு விவசாய அமைப்புகள், மல்யுத்த வீரர்கள், எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் நேரில் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

we-r-hiring

ஒடிஷா ரயில் விபத்து- 125 ரயில்கள் ரத்து!

அதேபோல், ஒலிம்பிக் கூட்டமைப்பு, சர்வதேச மல்யுத்தக் கூட்டமைப்பு, இந்திய விளையாட்டு வீரர்கள் என பல்வேறு தரப்பினரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் விடுத்த அழைப்பின் பேரில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அவரது இல்லத்தில் நேற்று (ஜூன் 04) இரவு 07.00 மணியளவில் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்ட வீரர்கள் நேரில் சந்தித்துப் பேசினார்.

சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல் நீடித்த இந்த சந்திப்பில், பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது டெல்லி மாநில காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர் மீது நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அமித்ஷாவிடம் கோரிக்கை வைத்தனர்.

அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்!

மத்திய உள்துறை அமைச்சருடனான சந்திப்பு நள்ளிரவுத் தாண்டி நீடித்ததாகவும் டெல்லி வட்டார தகவல்கள் கூறுகின்றனர்.

MUST READ