
கர்நாடகாவில் பெண்களுக்கு இலவச பேருந்துச் சேவை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

லாரியின் பின்னால் மோதிய கார்- 2 வயது குழந்தை உட்பட 6 பேர் பலி
சமீபத்தில், கர்நாடகா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி அளித்த ஐந்து வாக்குறுதிகள் வெற்றிக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் மேற்கொள்ளலாம் என்று வழங்கப்பட்டிருந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பெங்களூருவில் நேற்று (ஜூன் 11) நடந்த அரசு விழாவில் முதலமைச்சர் சித்தராமையா திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
அப்போது, பெண்களுக்கு இலவச பேருந்துச் சேவை வழங்கும் திட்டத்தின் அடையாளமாக மூன்று பெண்களுக்கு கர்நாடக மாநிலத்தின் மாநகர பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்வதற்கான அடையாள அட்டையை வழங்கினார்.
கனடாவில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு சிக்கல்!
இந்த விழாவில், துணை முதலமைச்சர் சிவக்குமார், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எனினும், கர்நாடகா மாநில அரசு போக்குவரத்துக் கழகம், பெங்களூரு அரசு போக்குவரத்துக் கழகத்தின் குளிர்சாதன பேருந்துகள், சாய்தளப் பேருந்துகளில் பெண்கள் கட்டணம் செலுத்திய பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


