காவலில் எடுத்த படிவத்தில் கையெழுத்திட செந்தில்பாலாஜி மறுப்பு
தன்னை அமலாக்கத்துறை காவலில் எடுத்ததற்கான படிவத்தில் கையெழுத்திட அமைச்சர் செந்தில்பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் வி.செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை அடுத்து, அவர் நிர்வகித்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மின்சாரத் துறையும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ச.முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையையும் பிரித்து வழங்கி நேற்று 6(ஜூன் 1) தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வி.செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடரவும் ஆணையிட்டுள்ளது.


இருதய பாதிப்பு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து அவரை காவலில் எடுத்ததற்கான படிவத்தில் கையெழுத்து பெற நீதிமன்றக் குழுவுடன் அமலாக்கத்துறை காவேரி மருத்துவமனைக்கு சென்றது. காவேரி மருத்துவமனைக்கு சென்றுள்ள அமலாக்கத்துறையிடம் கையெழுத்திட செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார். உடல்நிலையை காரணம் காட்டி நீதிமன்ற படிவத்தில் செந்தில் பாலாஜி கையெழுத்திடவில்லை என தெரிகிறது.


