
உட்கோட்டைப் பகுதியில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வு பணியில் கிரானைட் கல்தூண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

“புண்ணிய தலங்களைத் தரிசிக்க பாரத் கௌரவ் சிறப்பு ரயில்”- தெற்கு ரயில்வே அறிவிப்பு!
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், மாளிகைமேடு அருகே உள்ள உட்கோட்டைப் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 06- ஆம் தேதி மூன்றாம் கட்ட அகழாய்வு பணியை மேற்கொள்ள தமிழக அரசு சுமார் 30 லட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்திருந்தது. இதையடுத்து, கடந்த ஜூன் 22- ஆம் தேதி தொடங்கிய அகழாய்வு பணித் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
“நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!
இந்த அகழாய்வில், 72 செ.மீ. அகலம், 6.4 மீட்டர் நீளம் வரையிலான கிரானைட் கல்தூண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முழுமையாகத் தோண்டி எடுக்கப்பட்ட பின்னரே, அவற்றின் முழு விவரம் தெரிய வரும் என தொல்லியல் துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.


