
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனியின் 42வது பிறந்தநாளையொட்டி, அவரது ரசிகர்கள் கேக் வெட்டியும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும், நலத்திட்ட உதவிகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். அதேபோல், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், முதலமைச்சர்களும், ஆளுநர்களும் தோனிக்கு சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

டி.ஐ.ஜி. தற்கொலை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
அந்த வகையில், தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “முன்னாள் இந்திய கேப்டன் மற்றும் என்றென்றும் தல தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். சாதாரண பின்னணியில் இருந்து வந்தவர்களுக்கு உங்கள் சாதனைகள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தோனியின் சாதனைகள் எண்ணற்ற இளைஞர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தன்னிகரற்ற தலைமை பண்பால் அனைவருக்கும் ஊக்கம் அளிக்க தோனி தனது பணியைத் தொடர வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.


