நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்- 21 மசோதா தாக்கல்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 21 மசோதாக்கல் தாக்கலாகின்றன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் மற்றும் நிறைவேற்றப்படும் 21 மசோதாக்களின் பட்டியலை ஒன்றிய அரசு வெளியிட்டது. இந்த பட்டியலில் பொது சிவில் சட்ட மசோதா இடம்பெறவில்லை.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது, தபால் சேவைகள் மசோதா, பழங்கால நினைவுச் சின்னங்கள் திருத்த மசோதா, சர்வதேச நிதியம் மற்றும் வங்கி மசோதா, தற்காலிக வரி வசூல் மசோதா, தேசிய கூட்டுறவு பல்கலைக்கழக மசோதா, தேசிய பல் ஆணைய மசோதா, தேசிய செவிலியர் ஆணைய மசோதா, மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் மசோதா, பிறப்பு மற்றும் இறப்பு பதிவு திருத்த மசோதா, ஜம்மு காஷ்மீர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா, திரைப்படம் சட்ட திருத்த மசோதா, பத்திரிகை பதிவு மசோதா போன்றவை உட்பட 21 புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.