
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை (ஜூலை 20) தொடங்கவுள்ளது. வரும் ஆகஸ்ட் 11- ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும், இந்த கூட்டத்தொடரில் டெல்லி அதிகாரம் மசோதா உள்ளிட்ட 21 புதிய மசோதாக்களைத் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தார் அமைச்சர் பொன்முடி!
மொத்தம் 23 நாட்கள் நடைபெறும் மழைக்காலக் கூட்டத்தொடரில், விலைவாசி உயர்வு, மணிப்பூரில் நீடிக்கும் கலவரம், டெல்லி விவகாரம், அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப காங்கிரஸ், தி.மு.க., இடதுசாரிகள், திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.
மருத்துவக் கல்வியை வணிகமாக்கியதில் நீட் தேர்வு முழு வெற்றி- அன்புமணி ராமதாஸ்
ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக, இந்தியா என்ற பெயரிலான கூட்டணியை அமைத்திருக்கும் எதிர்க்கட்சிகள், ஒன்றாக செயல்பட முடிவுச் செய்திருப்பதால், இந்த கூட்டத்தொடரில் காரசார விவாதங்கள் இருக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.