- Advertisement -
77வது சுதந்திர தின விழா – ஆவடி காவல் ஆணையரகத்தில் ஆணையர் சங்கர் தேசியக்கொடி ஏற்றினார்
இந்தியாவின் 77ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று ஆவடி காவல் ஆணையரகத்தில் ஆவடி காவல் ஆணையர் சங்கர் ஐபிஎஸ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
இந்திய அரசின் சார்பில் சுதந்திர தின விழா ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்காகச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வழக்கமாக கடைப்பிடிக்கப்படும் வழிமுறைகளில் படி இந்த ஆண்டும் கொடியேற்றம் மற்றும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. அமைதி அணிவகுப்பு மற்றும் வாரிய அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆவடி காவல் ஆணையர் சங்கர் ஐபிஎஸ், இணை ஆணையர் விஜயகுமார் ஐபிஎஸ், துணை ஆணையர் ஆவடி பாஸ்கர், மாதவரம் கே.எஸ்.பாலகிருஷ்ணன், பெருமாள், கூடுதல் துணை ஆணையர் முத்துவேல்பாண்டி, உதவி ஆணையர்கள் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.