

நடிகர் விஜயலட்சுமியின் பாலியல் புகார் குறித்த விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இந்தியா வந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!
பாலியல் குற்றச்சாட்டை எழுப்பியுள்ள நடிகர் விஜயலட்சுமி, ஏற்கனவே காவல்துறையில் புகார் அளித்திருந்தார். வீடியோ, புகைப்படங்கள் குறித்த ஆதாரங்களையும் காவல்துறையில் ஒப்படைத்திருந்தார். இது பற்றி சீமான் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்துள்ளனர்.
இந்த வழக்கில் நடிகை விஜயலட்சுமி, கடந்த செப்.01- ஆம் தேதி அன்று திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதியிடம் நேரில் வாக்குமூலம் அளித்தார். மதுரவாயல் காவல் நிலையத்தில் வைத்து துணை ஆணையர் உமையாளும் விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில், இந்த வழக்கு குறித்து சீமானிடம் விசாரிக்க, காவல்துறை முடிவுச் செய்திருக்கிறது. இதற்காக, வளசரவாக்கம் காவல்துறையினர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
“ஜி20 உச்சி மாநாடு வளர்ச்சிக்கு புதிய பாதையை வகுக்கும்”- பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்!
அதில், நடிகை விஜயலட்சுமி அளித்துள்ள புகார் குறித்த விசாரணைக்காக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று (செப்.09) காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மனில் குறிப்பிட்டுள்ளனர்.


