spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

-

- Advertisement -

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

Image

அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பெண்கள் சுயமரியாதையுடன் வாழவே மகளிர் உரிமைத் தொகை. பெண்கள் ஒவ்வொரு நாளும் உழைக்கும் நேரத்தை கணக்கு பார்த்து ஊதியம் கொடுத்தால் எவ்வளவு ஊதியம் கொடுக்க முடியும். ஆனால் ஹவுஸ் ஒய்ஃப் என சாதாரணமாக சொல்லிவிடுகிறார்கள். பெண்களை அனைத்து நிலைகளிலும் உயர்த்துவதே திராவிடமாடல். சமூக சீர்த்திருத்த காலத்தை உருவாக்கியதுதான் திராவிட மாடல் இயக்கம். எனது மிகப்பெரிய சக்தியே எனது மனைவி துர்கா தான். ஆணும் பெண்ணும் சமம் என்பதை உணர்த்துவதே திராவிட மாடல்.

we-r-hiring

இது உதவித் தொகை அல்ல; உரிமைத்தொகை. ஒரு கோடி குடும்பங்களுக்கு விடியல் தரும் திட்டம். அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று பெண்களை அடக்கிவைத்திருந்தார்கள். குழந்தை திருமணங்களை இன்றும் ஆதரித்து பேசும் பிற்போக்குவாதிகளும் இருக்கிறார்கள். பெண்கள் வேலைக்கு செல்லமுடியாது, படிக்க முடியாது என்ர சூழலை மாற்றியுள்ளோம். மதத்தின் பெயராலும் பழமையின் பெயராலும் பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடக்கப்பட்டு இருந்தனர். உயர் வகுப்பைச் சேர்ந்த பெண்களும் இந்த பிற்போக்குதனங்களில் முடக்கப்பட்டு இருந்தனர். சிறுமிகளுக்கு திருமணம் செய்துவைக்க முடியவில்லை என்பதால் திராவிட இயக்கம் மீது சிலருக்கு கோபம்” என்றார்.

MUST READ