spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா"பழைய நாடாளுமன்ற வளாகத்தில் இறுதி அமர்வு"- மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு!

“பழைய நாடாளுமன்ற வளாகத்தில் இறுதி அமர்வு”- மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு!

-

- Advertisement -

 

"பழைய நாடாளுமன்ற வளாகத்தில் இறுதி அமர்வு"- மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு!
Photo: SANSAD TV

நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று (செப்.18) காலை 11.00 மணிக்கு தொடங்கியது. சிறப்புக் கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தின் வரலாறு குறித்து தங்களது கருத்துகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பகிரவுள்ளனர்.

we-r-hiring

சனதானத்தின் கருத்துக்கு எதிரானது தான் திராவிடம்- திருமாவளவன்

சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்கியவுடன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர். அப்போது, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, உறுப்பினர்களை அமைதிக் காக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

அதைத் தொடர்ந்து பேசிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, “இந்தியா ஜி20 மாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்த மத்திய அரசுக்கு பாராட்டுகள். ஜி20 உச்சி மாநாடு இந்தியாவில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த பல மாற்றங்கள் இந்தியா நடத்திய ஜி20 மாநாட்டினால் சாத்தியமாகியுள்ளது. ஜி20 மாநாட்டின் வெற்றி நாட்டின் சாதனையை உலகெங்கும் பறைசாற்றியுள்ளது.

மகளிர் உரிமை திட்டத்தில் ரூ.1,000 வரவில்லை?- நாளை முதல் உதவி மையம்

மேற்கத்திய நாடுகளுக்கும், மற்ற நாடுகளுக்கும் இடையே இருந்த இடைவெளியை இந்தியா போக்குகிறது” எனத் தெரிவித்தார்.

இதனிடையே, பழைய நாடாளுமன்ற வளாகத்தின் இறுதி அமர்வு இன்று (செப்.18) நடைபெறுவதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

MUST READ