இரவோடு இரவாக போடப்பட்ட தார் சாலை திடீர் பள்ளம்-பொதுமக்கள் அச்சம்..
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி உட்பட்ட பகுதி வார்டு 3 மிட்டனமல்லி பகுதியில் அரசினர் உயர்நிலைப்பள்ளி தெருவில் லட்ச கணக்கில் டெண்டர் விடப்பட்டு புதிதாக தார் சாலை போடப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இரவோடு இரவாக போட்ட தார் சாலை நடுவே தற்போது திடீரென உடைந்து பள்ளம் ஏற்பட்டதால் குடியிருப்பு வாசிகள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது ஏற்பட்டிருக்கக் கூடிய சாலையின் நிலைமையால் அந்தப் பகுதிகளில் வரக்கூடிய மாநகராட்சி குப்பை ஏற்றும் வாகனம் மற்றும் குடி தண்ணீர் லாரி உட்பட வாகனங்கள் வர முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.இதனால் வாகன ஓட்டிகள் ஒரு கிலோ மீட்டர் சுத்தி செல்லக்கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
மேலும் இரவோடு இரவாக போட்ட தார் சாலை தரமற்ற முறையில் இருப்பதாக புகார் அளித்தும்,ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியப் போக்காக செயல்படுவதாகவும் உடனடியாக சம்பந்தப் பட்டத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு புதிய சாலை தரமாக அமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.