spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"பயன்படுத்திக் கைவிடப்படும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடைச் செல்லும்"- உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

“பயன்படுத்திக் கைவிடப்படும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடைச் செல்லும்”- உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

-

- Advertisement -

 

"பயன்படுத்திக் கைவிடப்படும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடைச் செல்லும்"- உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
File Photo

ஒருமுறைப் பயன்படுத்தித் தூக்கி வீசப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க தமிழக அரசின் உத்தரவு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

we-r-hiring

அக்.30- ஆம் தேதி காவிரி ஒழுங்காற்றுக் குழு கூடுகிறது!

பேப்பர் கப் தயாரிப்பில் மெழுகு உள்ளிட்ட உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் பொருட்கள் சேர்க்கப்படுவதாக குற்றம் சாட்டி, தமிழகத்தில் கடந்த 2019- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒருமுறைப் பயன்படுத்தி வீசப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இந்த அரசாணையை எதிர்த்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அரசின் தடை உத்தரவை உறுதிச் செய்து தீர்ப்பளித்துள்ளது.

பிரபல நடிகைக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை உறுதி!

சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்தும், தமிழ்நாடு அரசின் அரசாணையை ரத்துச் செய்யக்கோரியும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பேப்பர் கப் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் கொண்டு தயாரிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில், தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பேப்பர் கப்கள் மீதான தடை உத்தரவை, மத்திய அரசின் நடைமுறைகள் அடிப்படையில், மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

MUST READ