spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமது போதையில் ரகளை... ஜெயிலர் பட வில்லன் நடிகர் கைது

மது போதையில் ரகளை… ஜெயிலர் பட வில்லன் நடிகர் கைது

-

- Advertisement -

பிரபல மலையாள நடிகர் விநாயகன் கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

ரஜினி, நெல்சன் கூட்டணியில் ஜெயிலர் திரைப்படம் உருவாகியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான படம் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வசூல் வேட்டை நடத்தியது. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன் ,வசந்த் ரவி ,விநாயகன், யோகி பாபு, ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பான் இந்திய நடிகர்கள் ஒன்று கூடிய இந்த படம் உலகம் முழுவதும் மெகா பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் விநாயகன் வில்லனாக மிரட்டி இருந்தார். விநாயகனின் வர்மன் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்படுகிறது. குறிப்பாக தமிழும் மலையாளமும் கலந்த அவரின் பேச்சும், அவருக்கான வசனங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

we-r-hiring
இந்நிலையில், வில்லன் நடிகர் விநாயகனை கேரள மாநில போலீசார் கைது செய்துள்ளனர். எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டதாக கூறி அவரை கைது செய்தனர். இதுமட்டுமன்றி மதுபோதையில், காவல்துறை அதிகாரியை அவர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

காவல் அதிகாரி தாக்கப்பட்ட காரணத்தால், காவல் நிலைய பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. இது தொடர்பாக நடிகர் விநாயகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. பிறகு, விநாயகன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படத்திலும் விநாயகன் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார்,

MUST READ