spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபா.ஜ.க.வினர் கைதுக்கு அண்ணாமலை கண்டனம்!

பா.ஜ.க.வினர் கைதுக்கு அண்ணாமலை கண்டனம்!

-

- Advertisement -

 

பா.ஜ.க.வினர் கைதுக்கு அண்ணாமலை கண்டனம்!
Photo: Annamalai Tweet

தமிழகம் முழுவதும் கட்சிக் கொடியேற்ற முயன்ற பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டதற்கு பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

அடுத்த மாதம் தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!

இது குறித்து அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “தமிழகம் முழுவதும், பா.ஜ.க. கொடிக்கம்பம் அமைத்துக் கொடியேற்ற முயன்ற தமிழக பா.ஜ.க. தலைவர்களும், சகோதர, சகோதரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். தி.மு.க. அரசின் இந்த அதிகார அத்துமீறலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மற்ற கட்சிகளின் கொடிக் கம்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும் இடங்களில் கூட, பா.ஜ.க. கொடிக்கம்பம் வைக்க அனுமதிக்காமல் தி.மு.க. தனது பாசிச முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் தமிழக பா.ஜ.க. பின்வாங்கப் போவதில்லை. 1949- ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு சுமார் 75 ஆண்டுகள் அரசியலில் இருக்கும் தி.மு.க., பா.ஜ.க. தொண்டர்களின் உழைப்பைக் கண்டு பயந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது.

சிறையில் இருந்து வெளியே வந்த சந்திரபாபு நாயுடுவிற்கு உற்சாக வரவேற்பு!

இத்தனை ஆண்டு காலம், போலி தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்து, மக்களை ஏமாற்றிக் கொள்ளையடித்து, குடும்ப முன்னேற்றத்துக்காக மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கும் தி.மு.க.வுக்கு, மக்கள் மத்தியில் இறுதிக் காலம் நெருங்கிவிட்டது. தி.மு.க.வின் பயம் இனி எப்போதும் தொடரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ