
தமிழக சுகாதாரத்துறை சார்பில், ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டத்தை தமிழக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன், முதலமைச்சரின் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சொர்க்கவாசல் திறப்பு- நாள்தோறும் 50,000 பக்தர்கள் இலவச தரிசனம் செய்ய அனுமதி!
சென்னை அடையாறு முத்துலட்சுமி பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கொட்டும் மழையில் நனைந்தவாறு நடைப்பயணம் மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி, சேலம், மயிலாடுதுறை, ஈரோடு, அரியலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும், ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் தொடங்கப்பட்டது.
‘சுற்றி வளைத்துத் தாக்கும் இஸ்ரேல்- அழிவின் பிடியில் காஸா!’
உடல் நலத்தைப் பாதுகாக்க நாளொன்றுக்கு 8 கி.மீ. தூரம் வரை நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந்த நடைப்பயிற்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாநகராட்சி மேயர் பிரியா, இந்து என்.ராம், மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு உயரதிகாரிகள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.