
மாநில அரசால் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அனுப்பப்பட்ட மசோதாவை, ஆளுநர் எவ்வாறு கிடப்பில் போட முடியும்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஒரே நாளில் 1.36 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்!
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க தாமதம் செய்வதாக பஞ்சாப் மாநில அரசு, அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பஞ்சாப் அரசின் செயல்பாடுகளும், அம்மாநில ஆளுநரின் செயல்பாடுகளும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இருதரப்பும் அரசமைப்பு சாசனத்தைச் சீர்குலைக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளீர்கள்; நெருப்புடன் விளையாடுகிறீர்கள் எனத் தெரிவித்துள்ளனர்.
மாநில அரசால் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்களை ஆளுநர் எவ்வாறு கிடப்பில் போட முடியும்? ஆளுநருக்கு இதுபோன்ற அதிகாரங்களை யார் கொடுத்தது? இந்த செயல்பாடுகள் கவலையளிக்கிறது என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
“தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!
சட்டப்பேரவை அமர்வு முடிக்கப்பட்டதால் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என எப்படி கூற முடியும்? நீங்கள் என்ன செய்கிறீர்கள் என நீதிபதிகள் கூறுவதன் தீவிரத்தை புரிந்துக் கொள்கிறீர்களா? என சரமாரியாகக் கேள்வி எழுப்பி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.