பிரபல ரவுடி கொம்பன் ஜெகன் (வயது 30) காவல்துறையினரால் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலைச் செய்யப்பட்டார்.
அயப்பாக்கத்தில் வீட்டு சமையல் அறைகள் புகுந்த காட்டு பூனை
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியான ஜெகன், கொலை, கொள்ளை உள்ளிட்ட 11 வழக்குகளில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தவர். கடந்த நவம்பர் 19- ஆம் தேதி கொம்பன் ஜெகன் பிறந்தநாள் விழாவுக்கு ஆயுதங்களுடன் வந்த அவரது கூட்டாளிகள் 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அதைத் தொடர்ந்து, கொம்பன் ஜெகனை, திருச்சி மாவட்டக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், சனமங்கலம் பகுதியில் அவர் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பகுதிக்கு விரைந்துச் சென்ற காவல்துறையினரைப் பார்த்த கொம்பன் ஜெகன் தப்பியோட முயன்றார்.
ஆவடியில் போக்குவரத்து சிக்னல் கோளாறு, வாகன ஓட்டிகள் அவதி !
அப்போது, காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்க முயன்ற போது, கொம்பன் ஜெகன் மீது குண்டுகள் பாய்ந்த நிலையில், சம்பவ இடத்திலேயே கொம்பன் ஜெகன் உயிரிழந்தார். தகவலறிந்த திருச்சி மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர் ரவுடியை என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இடத்திற்கு விரைந்துள்ளனர்.