- Advertisement -
ஆவடி அருகே மளிகை கடையில் புகுந்த 5 அடி நல்லபாம்பை பாம்பு மீட்பு வல்லுனர் பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த அண்ணணுர் திருக்குறள் தெரு பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார் நேற்று கனமழை பெய்த நிலையில் அவர் கடைக்குள் திடீரென்று 5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு புகுந்து விட்டதால் உடனடியாக ஆவடி பல்லுயிர் பாதுகாப்பு நிறுவனம் ரீகன் அவர்களுக்கு தகவல் தெரிவித்த நிலையில் விரைந்து வந்த பல்லுயிர் பாதுகாப்பினர் 2 மணி நேரம் போராடி சாமார்த்தியமாக நல்ல பாம்பை பிடித்து வனத்துறையினரின் அறிவுறுத்தலின்படி வெங்கல் பகுதியில் இருக்கக்கூடிய வனப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டது.


