போதைப் பொருள் ஒழிப்பு தொடர் நடவடிக்கையில் செங்குன்றத்தில் 75 கிலோ குட்கா பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது. ஆவடி காவல் ஆணையரகம் போதைப் பொருள் ஒழிப்பு தொடர் நடவடிக்கையாக நேற்று 30.11.2023 செங்குன்றம் காவல் மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் உதவி ஆணையாளர் திரு.அசோகன் அவர்களுக்கு கிடைத்த தவலின் பேரில் செங்குன்றம் காவல் ஆய்வாளர் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரி கொண்ட குழுவினர் நெ.32, அண்ணா தெரு, செங்குன்றத்தில் அமைந்துள்ள ராஜன் என்பவருக்கு சொந்தமான சாந்தி டீ கடையில் சோதனை மேற்கொண்டதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, கூல் லீப் போன்ற ஒன்பது வகையான புகையிலை பொருட்கள் சுமார் 75 கிலோ விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கைப்பற்றப்பட்டது.


இதன் தொடர்ச்சியாக தொடர்ந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்ததால் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் சாந்தி டீ கடையை மூடி சீல் வைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆவடி காவல் ஆணையரகத்தில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பவர்கள் மீது இது போன்று கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஆவடி காவல் ஆணையாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.



