spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமீட்புப் பணிகள்- கூடுதலாக 4 அமைச்சர்கள் நியமனம்!

மீட்புப் பணிகள்- கூடுதலாக 4 அமைச்சர்கள் நியமனம்!

-

- Advertisement -

 

மீட்புப் பணிகள்- கூடுதலாக 4 அமைச்சர்கள் நியமனம்!

we-r-hiring

நான்கு மாவட்ட மழை வெள்ள, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த கூடுதலாக நான்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தாக பிரபாஸ் படம்… ஏன் தெரியுமா?

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ள நீரை அகற்றும் பணிகளிலும், மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, நான்கு மாவட்ட மழை வெள்ள, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த கூடுதலாக நான்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, அமைச்சர்கள் எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், ராஜகண்ணப்பன், மூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, ஞானதிரவியம் உள்ளிட்டோரும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே, அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஈடுபட்டுள்ளனர்.

எதிர்மறை விமர்சனங்கள் என் திரைவாழ்வை பின்னுக்கு தள்ளமுடியாது – மோகன்லால்

இதனிடையே, பொதுமக்கள் நிவாரண உதவி, மருத்துவ உதவிகள் கோரவும், பாதிப்புகள் பற்றி தெரிவிக்கவும் 83485- 39914 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ