spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஎன்னது... 'தளபதி 68' பட டைட்டில் இதுதானா?

என்னது… ‘தளபதி 68’ பட டைட்டில் இதுதானா?

-

- Advertisement -

என்னது... தளபதி 68 பட டைட்டில் இதுதானா?நடிகர் விஜய் கடைசியாக நடித்த திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலமையான விமர்சனங்களை பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸில் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கி வரும் தளபதி 68 படத்தில் விஜய் நடித்து வருகிறார். மாநாடு படத்தைப் போல இந்த படமும் அரசியல் கதைகளத்தில் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறாராம். அதன்படி நடிகர் விஜய்யை இளமையாக காட்டுவதற்கு டிஏஜிங் தொழில்நுட்பம் மிகுந்த பொருட்செலவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் கடந்த சில தினங்களாக தளபதி 68 படத்தின் பர்ஸ்ட் லுக் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக இருப்பதாக பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அது மட்டும் இல்லாமல் ரசிகர்கள் பலரும் படத்தின் தொடர் அப்டேட்டுகளை கொண்டாடி வருகின்றனர். என்னது... தளபதி 68 பட டைட்டில் இதுதானா?அந்த வகையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும்படி மற்றொரு புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது ஏற்கனவே தளபதி 68 படத்தின் டைட்டில் ஆங்கிலத்தில் இருக்கும் என்று கூறப்பட்டதை போல் தற்போது இப்படத்திற்கு பாஸ் என்று தலைப்பு வைத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

we-r-hiring

தளபதி68 படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜயுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா,லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, மைக் மோகன் என பலரும் நடித்து வருகின்றனர்.

MUST READ