spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி, ஆவடியில் ஜம்போ சர்க்கஸை நாசர் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்!

கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி, ஆவடியில் ஜம்போ சர்க்கஸை நாசர் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்!

-

- Advertisement -

 

கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி, ஆவடியில் ஜம்போ சர்க்கஸை நாசர் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்!

we-r-hiring

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி, திருவள்ளூர் மாவட்டம், ஆவடி பிரியோ பிளாசா மைதானத்தில் ஜம்போ சர்க்கஸை முன்னாள் அமைச்சரும், ஆவடி சட்டமன்ற உறுப்பினருமான நாசர் திறந்து வைத்தார்.

ஒருநாள் தொடரை வென்றது இந்திய அணி!

சர்க்கஸ் என்றாலே மக்கள் மனதில் மகிழ்ச்சியையும், வியப்பையும்,கொடுத்து நீங்கா இடம் பெற்று விளங்குகிறது ஜம்போ சர்க்கஸ். இதில் பணியாற்றும் கலைஞர்கள் பல்வேறு தரப்பட்ட திறமைகளை வெளிப்படுத்தி மக்களை மகிழ்விப்பதில் மிகவும் மகிழ்ச்சியோடு செயல்பட்டு வருகின்றனர். இதில் பார்வையாளர்களை வியக்கும் வகையில் அந்தரத்தில் தாவி வேறொரு இடத்தில் பறந்து கயிற்றை பிடிப்பது மனதினுள் பயத்தை ஏற்படுத்துகிறது.

இதனைத் தொடர்ந்து சைக்கிள் சாகசம் மற்றும் கூண்டினுள் மோட்டார் சைக்கிளில் மூவர் வாகனத்தை இயக்குவது கண் கவரும் காட்சியாக உள்ளது.

தென்னாப்பிரிக்காவில் இருந்து அவசர அவசரமாக தாயகம் திரும்பிய விராட் கோலி!

தொடர்ந்து நாய்களைக் கொண்டு திறமைகளை வெளிப்படுத்தி மக்களை மகிழ்வித்துக் காட்சிப்படுத்தினர். வளையங்களைக் கொண்டு உடலில் இருந்து விழாமல் திறம்பட சுழற்றி காட்சிப்படுத்தினர். மேலும் ஆண், பெண் இருவர் கயிற்றின் மூலம் அந்தரத்தில் இணைந்து பறந்து நடன அசைவுகளை செய்து பார்வையாளர்களை மகிழ்வித்தனர். தங்கள் உயிரை பணயம் வைத்து மக்களை மகிழ்வித்து மகிழ்வதில் இது போன்ற கலைஞர்களை நாம் தான் ஊக்கவிக்க வேண்டும்.

இந்த அவசர உலகில் சற்று மனதிற்கு வியப்பையும், நகைச்சுவையும், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி ஆதரவளிக்கும். இது போன்ற கலைஞர்களை ஊக்குவிக்க ஜம்போ சர்க்கஸ் தொடர்ந்து செயல்பட வேண்டும் என சர்க்கஸ் நிறுவனமும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

MUST READ