spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்எலி கடித்து பலியான 40 நாள் பச்சிளங்குழந்தை.. தெலங்கானாவில் அதிர்ச்சி

எலி கடித்து பலியான 40 நாள் பச்சிளங்குழந்தை.. தெலங்கானாவில் அதிர்ச்சி

-

- Advertisement -

தெலங்கானாவில் பிறந்து 40 நாட்களே ஆன பிஞ்சு குழந்தை, எலி கடித்து மரணம் அடைந்த செய்தி நெஞ்சை உலுக்கியுள்ளது.

எலி கடித்து பலியான 40 நாள் பச்சிளங்குழந்தை.. தெலங்கானாவில் அதிர்ச்சி

நாகர் கர்நூல் மாவட்டம் நாகனூல் கிராமத்தை சேர்ந்த சிவா, லட்சுமி கலா தம்பதிக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகளாகும் நிலையில், கடந்த மாதம் ஆண் குழந்தை நலமுடன் பிறந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை கொண்டு வந்தது.

we-r-hiring

அன்பு குழந்தையுடன் லட்சுமி கலா தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். கடந்த நான்கு நாட்களுக்கு முன் தூங்கிக்கொண்டிருந்த பிஞ்சு குழந்தையின் முகத்தில் எலி ஏறி மூக்கை கடித்துள்ளது. இதையடுத்து அருகே இருந்த மருத்துவமனையில் மருந்து பெற்று காயத்திற்கு தடவி வந்துள்ளனர்.பெற்றோர்களின் அலட்சிய போக்கினால் குழந்தை உயிரிழந்தது.எலி கடித்து பச்சிளம் குழந்தை உயிர் இழந்த சம்பவம் அப்பகுதி மக்களின் நெஞ்சை உலுக்கியது .

MUST READ