வில்லனாக நடிப்பது பிடிக்கிறது: விஜய் சேதுபதி
- Advertisement -
பிரபல நடிகர் விஜய் சேதுபதி, தனக்கு வில்லனாக நடிப்பது பிடித்திருக்கிறது என தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா என்பதை தாண்டி இந்திய சினிவில் முன்னணி நடிகராக வலம் வந்து, தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தியிருப்பவர் விஜய் சேதுபதி. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமா பாதையில் கைபிடித்து நடந்து வந்த விஜய் சேதுபதி பல படங்களில் முகம் தெரியாத அளவு கூட கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான பீட்சா திரைப்படம் விஜய் சேதுபதிக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. தற்போது தமிழில் ஹீரோவாக மட்டுமன்றி வில்லனாகவும் கலக்கி வருகிறார். கோலிவுட்டில் தடம் பதித்த விஜய் சேதுபதி அடுத்து அடுத்து பல மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் மெரி கிறிஸ்துமஸ். இத்திரைப்படம் வரும் ஜனவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார். எந்த மொழியாக இருந்தாலும், மாறுபட்ட கதாபாத்திரம் என்றால் விஜய் சேதுபதியின் பெயர் தான் நினைவுக்கு வருகிறது. தமிழ் இயக்குநர்கள் மட்டுமன்றி பிற மொழி இயக்குநர்களும் அவரது கால்ஷீட்டுக்காக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நிஜ வாழ்வில் என்னால் யாரையும் கொடுமைப்படுத்த முடியாது. எனக்கு அத்தகைய மனம் இல்லை. கொலை செய்வது என்பதை என்னால் கற்பனை கூட செய்ய இயலாது. ஆனால், வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கும்போது இத்தகயை வாய்ப்புகள் கிடைக்கின்றன. எனக்கு சவாலாக உள்ள வில்லன் வேடத்தில் நடிப்பது பிடித்திருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.