Homeசெய்திகள்தமிழ்நாடுவீட்டின் பூட்டை உடைத்து 16 சவரன் தங்கநகைகள் கொள்ளை!

வீட்டின் பூட்டை உடைத்து 16 சவரன் தங்கநகைகள் கொள்ளை!

-

- Advertisement -

 

வீட்டின் பூட்டை உடைத்து 16 சவரன் தங்கநகைகள் கொள்ளை!

சென்னையை அடுத்த குன்றத்தூர், திருநாகேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த தம்பதி வேணுகோபால் (வயது 50)- சரோஜா (வயது 45). இவர் கார்பென்டராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு விஜயலட்சுமி (வயது 21), நித்யா (வயது 19) என இரண்டு மகள்கள் உள்ளனர். விஜயலட்சுமி திருமணம் ஆகி தனது தாய் வீட்டிற்கு வந்த நிலையில், நித்யா படித்து கொண்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

‘முதலமைச்சர் குறித்து அவதூறு’- நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது!

இந்த சூழலில், நேற்று (ஜன.07) வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டு சரோஜா வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறக்கப்பட்டு பீரோ உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டிற்குள் சென்றுப் பார்த்த போது பீரோவில் இருந்த சுமார் 8 லட்சம் மதிப்புடைய 16 சவரன் தங்கநகைகளை மர்மநபர் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து, கொள்ளை சம்பவம் குறித்து குன்றத்தூர் காவல் நிலையத்தில் சரோஜா புகார் அளித்திருந்தார். அதன் பேரில் வழக்குப்பதிவுச் செய்த குன்றத்தூர் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். அத்துடன், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கைரேகைகள் பதிவுச் செய்யபப்ட்டது.

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சரோஜா, “தனது மூத்த மகள் திருமணமாகி வீட்டிற்கு வந்திருந்த நிலையில் 8 சவரன் தங்கநகைகள் மற்றும் இளைய மகள் திருமணத்திற்காக வாங்கி வைத்திருந்த 8 சவரன் தங்கநகை என மொத்தம் 16 சவரன் தங்கநகைகளை மர்ம நபர் திருடிச் சென்றுவிட்டுள்ளனர்.

தற்போது மூத்த மகள் திருமணத்திற்கு போட்ட நகைகளை மாப்பிள்ளை வீட்டார் கேட்பதால் அதனை கொடுக்க முடியாமல், மகள் தனது கணவர் வீட்டிற்கு செல்ல முடியாமல் இருக்கிறார். நகையைத் திருடிய நபர்கள் யாராக இருந்தாலும் நகையைக் கொண்டு வந்து கொடுத்து விடுங்கள்; இல்லையென்றால், தனது மகள் வாழ்க்கை வாழா வெட்டியாக ஆகிவிடுவாள்” என கண்ணீர் மல்க பேசியது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ