spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபோக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் 2ஆவது நாளாக வேலை நிறுத்தம்!

போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் 2ஆவது நாளாக வேலை நிறுத்தம்!

-

- Advertisement -

 

சிறப்பு பேருந்து

we-r-hiring

தமிழகத்தில் போக்குவரத்துத் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் இரண்டாவது நாளாகத் தொடர்கிறது.

அரசுத் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ராஜினாமா!

ஓய்வூதியர்களுக்கு நிலுவைத் தொகை உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நேற்று முன்தினம் (ஜன.08) முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சி.ஐ.டி.யு., அண்ணா தொழிற்சங்கங்கள் உள்ளிட்டவை வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். போக்குவரத்து தொழிற்சங்க வேலை நிறுத்தத்தில் தொ.மு.ச. மற்றும் ஐ.என்.டி.யு.சி. சங்கங்கள் பங்கேற்கவில்லை. மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதால் வேலை நிறுத்தத்தில் இருந்து விலகுவதாக ஐ.என்.டி.யு.சி. அறிவித்துள்ளது.

போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பில்லை. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் முழுமையான பேருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், பொங்கல் பண்டிகையையொட்டி, பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்லவிருப்பதால், பொதுமக்களின் நலன் கருதி உடனடியாகப் பணிக்கு திரும்புமாறு போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனினும், தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போக்குவரத்து துறையின் சீரழிவுக்கு திராவிட கட்சிகளின் ஆட்சியே காரணம் – சீமான் குற்றச்சாட்டு

இந்த் சூழலில், இன்று (ஜன.10) காலை 07.00 மணி நிலவரப்படி, தமிழகத்தில் 97.87% பேருந்துகள் இயக்கப்படுவதாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 13,782 பேருந்துகளில் 13,489 பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் 97.67% மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகிறது; சென்னையில் 3,092 பேருந்துகள் இயக்கப்பட வேண்டிய நிலையில், 3,020 பேருந்துகள் இயக்கப்படுகிறது. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 100% பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசுத் தெரிவித்துள்ளது.

இன்று (ஜன.10) காலை 07.00 மணி நிலவரப்படி, விழுப்புரம் கோட்டத்தில் 99.10%, சேலம் கோட்டத்தில் 97.61%, கோவை கோட்டத்தில் 95.56%, கும்பகோணம் கோட்டத்தில் 97.56%, மதுரை கோட்டத்தில் 98.71%, நெல்லை கோட்டத்தில் 99.28% பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, திருச்சியில் 100 கிலோ மீட்டர் வரை உள்ள அரசுப் பேருந்துகளைத் தற்காலிக ஓட்டுநர்கள் இயக்கி வருகின்றனர். 115 பேர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டு அவர் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துத் துணை மேலாளர் தெரிவித்துள்ளார்.

MUST READ