spot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிதலைமறைவு குற்றவாளி அதிரடி கைது!

தலைமறைவு குற்றவாளி அதிரடி கைது!

-

- Advertisement -

5 ஆண்டு காலம் தலைமறைவாக இருந்த குற்றவாளியை ஆவடி காவல் ஆணையரகம் அதிரடியாக கைது செய்தது!

தலைமறைவு குற்றவாளி அதிரடி கைது!

ஆவடி காவல் ஆணையரகம் மத்திய குற்ற பிரிவில் பரமேஸ்வரி என்பவர் கொடுத்த புகார் மனுவில்,

we-r-hiring

அம்பத்தூர் பாடி லுகாஸ் TVS கம்பெனியில் வேலை செய்து வந்த சதாசிவம் மற்றும் அவரது மனைவி சௌபாக்கியம் ஆகியோர்கள் திருவேற்காடு, அன்பு நகர், நெ.153-ல் வசித்தபோது ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி மளிகை பொருட்கள் பண்டு சீட்டு நடத்தி 20 நபர்களிடம் சுமார் 48 லட்சம் ரூபாயை ஏமாற்றிவிட்டு கடந்த 2019-ஆம் வருடம் வீட்டை காலி செய்துகொண்டு தலைமறைவாகி விட்டதாக கொடுத்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையில் இருந்து வந்தது.

தலைமறைவு குற்றவாளி அதிரடி கைது!

இப்புகார் மனுவின் மீது ஆவடி காவல் ஆணையாளர் திரு.கி.சங்கர்,அவர்களின் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் திருமதி.சுபாஷினி அவர்கள் வழக்கில் தொடர்புடைய கடந்த 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த குற்றவாளி சதாசிவம் என்பவரை இன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பின் குற்றவாளியை புழல் சிறையில் அடைத்தார்.

MUST READ