
சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காவில் உள்ள அடுக்குமாடி கட்டிடங்களின் 10- வது மாடியில் ஏசியில் இருந்து வாயு கசிந்த நிலையில், அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த 240 பேரில் 13 பேர் திடீரென மயக்கமடைந்தனர்.
கடும் பனிமூட்டம்- வடமாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
இதையடுத்து, மயக்கமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பணியாளர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதனிடையே, அலுவலகத்தில் இருந்த அனைவரும் வெளியேறிய நிலையில், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, மின் இணைப்பு உடனடியாகத் துண்டிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த துரைப்பாக்கம் தீயணைப்பு நிலையத்தின் தீயணைப்பு வீரர்கள், அலுவலகத்தில் இருந்த புகையை வெளியேற்றினர்.
இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!
இது குறித்து வழக்குப்பதிவுச் செய்த துரைப்பாக்கம் காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஐ.டி. ஊழியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.