
அயோத்தி ராமர் கோயில் திறப்பு மற்றும் மஹா கும்பாபிஷேகத்தையொட்டி, வரும் ஜனவரி 22- ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரைநாள் விடுமுறையை அறிவித்தது மத்திய அரசு.

வரும் ஜனவரி 22- ஆம் தேதி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள அயோத்தியில் உள்ள பிரசித்திப் பெற்ற ராமர் கோயிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அயோத்தியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேக விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், பல்வேறு நாடுகளின் தூதர்கள் என 8,000- க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொள்ளவுள்ளனர்.
இந்த நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் ஜனவரி 22- ஆம் தேதி அயோத்தி ராமர் கோயில் திறப்பு மற்றும் மஹா கும்பாபிஷேகம் விழா கோலாகலமாக நடைபெறவுள்ள நிலையில், அதில் அரசு ஊழியர்கள் பங்கேற்க ஏதுவாக, அன்றைய தினம் நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரைநாள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களிலிருந்து வெளியேறிய அல்போன்ஸ் புத்திரன்!
ஜனவரி 02- ஆம் தேதி மதியம் 02.30 மணி வரை அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், ,மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் செயல்படாது என்றும், மதியம் 02.30 மணிக்கு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.