spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசி.வி.சண்முகம் மீதான இரு அவதூறு வழக்குகளை ரத்துச் செய்தது உயர்நீதிமன்றம்!

சி.வி.சண்முகம் மீதான இரு அவதூறு வழக்குகளை ரத்துச் செய்தது உயர்நீதிமன்றம்!

-

- Advertisement -

 

cv shanmugam

we-r-hiring

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு எதிரான இரு அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மகன் மீது புகார்!

விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த 4 அவதூறு வழக்குகளை ரத்துச் செய்யக் கோரி அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. நான்கு அவதூறு வழக்குகளில் இரண்டு வழக்குகளை ரத்து செய்த உயர்நீதிமன்ற நீதிபதி, இரு வழக்குகளை ரத்துச் செய்ய மறுப்புத் தெரிவித்துள்ளார்.

ஏறுதழுவுதல் அரங்கம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

ரத்துச் செய்யப்பட்ட இரண்டு வழக்குகளும் அவதூறு வழக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் அரசியல் கட்சிகளின் மீதான ஏராளமான அவதூறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது நினைவுக்கூறத்தக்கது.

MUST READ