spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மகன் மீது புகார்!

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மகன் மீது புகார்!

-

- Advertisement -

 

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மகன் மீது புகார்!

we-r-hiring

தூத்துக்குடியைச் சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் மகன் ஜெபசிங் மீது அவரது முன்னாள் காதலி பண மோசடி புகார் கொடுத்துள்ளார்.

கமலும் இல்லை கார்த்தியும் இல்லை….. அடுத்த படத்தில் இவர்தான் ஹீரோ…. எச். வினோத் கொடுத்த ட்விஸ்ட்!

தூத்துக்குடியைச் சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மகன் ஜெபசிங் மீது என்பவருக்கு திருமணமாகி ஏற்கனவே குழந்தைகள் உள்ள நிலையில் இரண்டு ஆண்டுகள் உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிந்து சுகந்தி என்பவருடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, வீடு வாங்கித் தருவதாகக் கூறி 30 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 35 சவரன் தங்க நகைகளை சுகந்தியிடம் இருந்து ஜெபசிங் பெற்றதாகவும், ஆனால் வாங்கிய வீட்டை சுகந்தியின் பெயரில் அல்லாமல் தமது பெயரிலேயே அவர் பத்திரப்பதிவுச் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, அந்த வீட்டை விற்பனை செய்வதற்காக ஜெபசிங்- கின் தந்தையான அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன் முன்பணம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஜெபசிங் பெற்ற பணம் மற்றும் நகைகளைத் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றுவதுடன் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெற்கு காவல் நிலையத்தில் சுகந்தி புகார் கொடுத்துள்ளார்.

கமல்ஹாசன், எச். வினோத் கூட்டணியின் ‘KH233’…… தாமதத்திற்கான காரணம் என்ன?

ஜெபசிங் முன்னாள் காதலி சுகந்தி கூறுகையில், “ஜெபசிங் வீடு வாங்கித் தருவதாகக் கூறி என்னை ஏமாற்றிவிட்டார். என்னுடைய வீட்டை எப்படி விற்க முடியும்; கேட்டல் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். ஜெபசிங் வீடு வாங்கித் தருவதாகக் கூறி என்னை ஏமாற்றிவிட்டார். தகாத வார்த்தைகளால் திட்டிய ஆடியோ பதிவு என்னிடம் உள்ளது. என்னுடைய வீட்டை எப்படி விற்க முடியும், கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ