
பா.ஜ.க. பிரமுகர் ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கில் 15 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

கடந்த 2021- ஆம் ஆண்டு கேரள மாநில பா.ஜ.க. தலைவர் ரஞ்சித் சீனிவாசனின் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல், அவரை சரமாரியாக அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலைச் செய்துவிட்டு தப்பியோடியுள்ளது. இந்த சம்பவம் கேரள மாநில மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதைத் தொடர்ந்து, வழக்குப்பதிவுச் செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், வழக்கு மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து பல்வேறு கோணங்களில் புலனாய்வு அமைப்பினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதில், மத்திய அரசால் தடைச் செய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 15 பேர், பா.ஜ.க. பிரமுகரைக் கொலை செய்தது தெரிய வந்தது.
காந்தியின் திருவுருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை!
இந்த வழக்கு மாவேலிக்கரா கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது. அதில், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த அஜ்மல், அனூப், அஸ்லாம் உள்ளிட்ட 15 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பை வழங்கியுள்ளது.