spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகாந்தியின் திருவுருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை!

காந்தியின் திருவுருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை!

-

- Advertisement -

 

காந்தியின் திருவுருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை!

we-r-hiring

மகாத்மா காந்தியின் 77- வது நினைவு நாளையொட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று (ஜன.30) காலை 10.00 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள உத்தமர் காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மலர்தூவி மரியாதைச் செலுத்தினார்.

சொன்ன மாதிரியே சண்முக பாண்டியன் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்!

அதைத் தொடர்ந்து, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி, துணை மேயர் மகேஷ் குமார், ஆளுநரின் செயலாளர் கிர்லோஷ் குமார் இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் முனைவர் சுப்பிரமணியன் இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மோகன் இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் காந்தியின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மீண்டும் புஷ்பா பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ராம்சரண்!

மகாத்மா காந்தியின் நினைவுநாளையொட்டி, ஆளுநர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “மகாத்மா காந்தியின் புண்ணியதிதியில் அவருக்கு பணிவுடன் அஞ்சலி செலுத்துகிறேன். சத்தியம், அகிம்சை, எளிமை, உலகளாவிய சகோதரத்துவம் ஆகிய அவரது லட்சியங்கள் பாரதத்தின் ஆன்மாவாக இருப்பதுடன் அவை உள்ளடக்கிய மற்றும் நிலையான உலகளாவிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கான உத்வேகத்தின் ஆதாரமாகவும் வழிகாட்டும் சக்தியாகவும் என்றும் நீடிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ