spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநெல்லைப் போன்று கடலூரிலும் மேயருக்கு நெருக்கடி!

நெல்லைப் போன்று கடலூரிலும் மேயருக்கு நெருக்கடி!

-

- Advertisement -

 

நெல்லைப் போன்று கடலூரிலும் மேயருக்கு நெருக்கடி!

we-r-hiring

நெல்லையைப் போன்று கடலூரிலும் தி.மு.க.வைச் சேர்ந்த மேயருக்கு சொந்த கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்களே எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். கவுன்சிலர்கள் 10 பேர் உண்ணாவிரதம் இருக்க முடிவுச் செய்துள்ளனர்.

14 எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை வாபஸ்!

கடலூர் மாநகராட்சி ஆன பிறகு கடந்த ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில் மேயராக தி.மு.க.வைச் சேர்ந்த சுந்தரி தேர்வுச் செய்யப்பட்டிருந்தார். அப்போதே தி.மு.க. கவுன்சிலர்கள் போட்டி வேட்பாளரை நிறுத்தியிருந்தனர். இந்த சூழலில், மேயர் சுந்தரி தங்கள் வார்டுகளுக்கு எந்த பணிகளையும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டி வரும் தி.மு.க. கவுன்சிலர்கள் 10 பேர் மாநகராட்சிக் கூட்டங்களில் அவருடன் வாக்குவாதங்களிலும் ஈடுபட்டு வந்தனர்.

இது குறித்து புகார் அளித்தும் தி.மு.க. தலைமையும், சம்மந்தப்பட்டத் துறை அமைச்சரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மேயர் சுந்தரியைக் கண்டித்து மாநகராட்சி வளாகத்தில் இன்று (ஜன.31) உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அந்த கவுன்சிலர்கள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் வந்துச் செல்லும் பகுதியில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி இல்லை என ஆணையாளர் ஏற்கனவே கூறியிருந்ததால், கடலூர் மாநகராட்சி வளாகத்தில் பரபரப்பான சூழலே நீடிக்கிறது.

ஓய்வூதியம் தொடர்பான மத்திய அரசின் அதிரடி அறிவிப்பால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி!

நெல்லையில் தி.மு.க.வைச் சேர்ந்த சரவணனுக்கு எதிராக அண்மையில் சொந்த கட்சியின் கவுன்சிலர்களே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இருப்பினும், கடைசி நேரத்தில் கட்சித் தலைமை மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக, வாக்கெடுப்பில் கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இதனால் அந்த தீர்மானம் தோல்வி அடைந்தது நினைவுக்கூறத்தக்கது.

MUST READ