spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"வீட்டின் வாசலில் கோலம் கூட போட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்"- மாநகராட்சிக் கூட்டத்தில் கவுன்சிலர் வேதனை!

“வீட்டின் வாசலில் கோலம் கூட போட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்”- மாநகராட்சிக் கூட்டத்தில் கவுன்சிலர் வேதனை!

-

- Advertisement -

 

"வீட்டின் வாசலில் கோலம் கூட போட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்"- மாநகராட்சிக் கூட்டத்தில் கவுன்சிலர் வேதனை!

we-r-hiring

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சியில் இந்த வருடத்தில் முதல் மாமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஜன.31) ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாநகராட்சி மேயர் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

ஓய்வூதியம் தொடர்பான மத்திய அரசின் அதிரடி அறிவிப்பால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி!

இந்தக் கூட்டத்தில் ஆரம்பம் முதலே காரசாரமான விவாதங்கள் எழுந்தது. குறிப்பாக ஆவடி மாநகராட்சி 38- வது வார்டு கவுன்சிலர் மேகலா ஸ்ரீனிவாசன், தீப்பொறி பறக்க பேசியதைக் கேட்டு ஆவடி மாநகராட்சி அதிகாரிகள், திக்கு முக்காடி போன நிலையில், அவர்கள் செய்வதறியாது முழித்துக் கொண்டே நின்றனர்.

38- வது வார்டு கவுன்சிலர் மேகலா சீனிவாசன் கூறுகையில், “எனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகள் சரிவர அகற்றப்படவில்லை. தூய்மை பணியாளர்கள் காலையில் எத்தனை மணிக்கு வருகிறார்கள் என்று அதிகாரிகளைப் பார்த்து கேள்வி எழுப்பிய அவர், மாலை ஆனாலும் எங்கள் பகுதியில் குப்பைகள் அகற்றப்படாமலேயே இருப்பதாக குற்றசாட்டை முன்வைத்தார். இதனால் ஒரு பெண்ணாக நான் விடியற்காலையில் எழுந்து எங்கள் வீட்டின் வாசலில் கோலம் கூட போட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

அவ்வாறு கோலம் போட வெளியே வரும் பட்சத்தில் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் என்னை பார்த்து திட்டி விட்டு செல்கிறார்கள். காலை விடிந்த பிறகும் வீட்டிலிருந்து வெளியே வராவிட்டால், வீட்டிற்குள் வந்து திட்டி விட்டு செல்கிறார்கள். இதுபோன்ற நிலைமைக்கு நான் தள்ளப்பட்டுள்ளேன்.

பா.ஜ.க. பிரமுகர் கொலை- 15 பேருக்கு தூக்குத் தண்டனை!

மேலும் அதிகாரிகள் சரிவர பணியாற்றவில்லை. அவ்வப்போது இடம் மாறி செல்கின்றனர். முன்னரெல்லாம் நான் போட்ட மெசேஜுக்கு நோட்டட் என்று அதிகாரிகள் பதில் அனுப்புவார்கள். நோட்டட் மட்டும் போடுகிறீர்கள்… வேலை செய்ய தயங்குகிறீர்கள் என்று நான் மெசேஜ் பண்ண பிறகு, அன்றிலிருந்து நோட்டட் என்று கூட போடுவது இல்லை. அப்போது கூட்டரங்கம் முழுவதும் சிரிப்பலை எழுந்தது.

மேகலா சீனிவாசன் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த போது அதிகாரிகள் அதற்கு மழுப்பலாக பதிலளித்த நிலையில், கோபத்தின் உச்சிக்கே சென்ற அவர், கவுன்சிலர்களாகிய நாங்கள் கடந்த இரண்டு வருங்களாக இதையேதான் கூறுகிறோம். அதிகாரிகளான நீங்கள் அதேபோல் மழுப்பியே வருகிறீர்கள். அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் ஆரவாரமாக மேசையை தட்டி சிரித்தனர்.

14 எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை வாபஸ்!

இனிவரும் காலங்களில் மாதம் ஒருமுறை அல்லாமல் 15 நாட்களுக்கு ஒரு முறை மாமன்ற கூட்டம் நடத்த வேண்டும். மேயருக்கு கோரிக்கை விடுத்து, இனி வரும் காலங்களில் உறுப்பினர்களின் கோரிக்கைகளை ஏற்று பொதுமக்களுக்கு அதிகாரிகள் என்ன என்ன பணிகள் செய்கிறார்கள்? என்பதை மாமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்க வேண்டும்” என்றார்.

MUST READ