spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாபட்ஜெட் கூட்டத்தொடர்- மக்களவை மேலும் ஒருநாள் நீட்டிப்பு!

பட்ஜெட் கூட்டத்தொடர்- மக்களவை மேலும் ஒருநாள் நீட்டிப்பு!

-

- Advertisement -

 

மக்களவையில் உறுப்பினர்கள் கடும் அமளி....மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை!
Photo: SANSAD TV

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முக்கிய காரணிகளுக்காக வரும் சனிக்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

பிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லை… கார் ஓட்டுநர் கைது…

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் கடந்த ஜனவரி 31- ஆம் தேதியுடன் தொடங்கியது. கடந்த பிப்ரவரி 01- ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்த நிலையில், தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வந்தன.

முன்னதாக, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 09- ஆம் தேதியான நாளை வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் ஒருநாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய காரணிகளுக்காக வரும் பிப்ரவரி 10- ஆம் தேதி சனிக்கிழமையும் மக்களவை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி பட இசையமைப்பாளர் மறைவு… சோகத்தில் திரையுலகம்…

முன்னதாக காங்கிரஸ் தலைமையிலான அரசின் 2014 மற்றும் தற்போதையை பொருளாதார நிலையை ஒப்பிட்டு வெள்ளை அறிக்கை நடப்புத் தொடரிலேயே தாக்கல் செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

MUST READ