Homeசெய்திகள்தமிழ்நாடு'தமிழ்நாடு பட்ஜெட் 2024': மாபெரும் 7 தமிழ்க்கனவு- பட்ஜெட் சாராம்சம்!

‘தமிழ்நாடு பட்ஜெட் 2024’: மாபெரும் 7 தமிழ்க்கனவு- பட்ஜெட் சாராம்சம்!

-

- Advertisement -

 

tn assembly meet
tn assembly meet

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று (பிப்.19) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிவிக்கப்படுமா என்று பொதுமக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

தளபதி 69 படத்தின் அறிவிப்பு எப்போது?

நிதியமைச்சராக தங்கம் தென்னரசு பதவியேற்ற பின் தாக்கல் செய்யும் முழு பட்ஜெட் இதுவாகும். இந்த நிலையில், மாபெரும் 7 தமிழ்க்கனவு என்ற தலைப்பில் பட்ஜெட்டின் சிறப்பமசங்களை வெளியிட்டு எதிர்பார்ப்பைக் கூடியிருக்கிறது தமிழ்நாடு அரசு. சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலன், பசுமை வழிப்பயணம், தாய்த் தமிழும், தமிழர் பண்பாடும் ஆகிய ஏழு அம்சங்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

எனவே, இந்த ஏழு அம்சங்களுக்கும் அதிகளவில் நிதி ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நகர பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவை திட்டம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், மகளிருக்கு பயன் தரும் வேறு சில திட்டங்கள் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதேபோல், விளையாட்டுத் துறையை மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசு அண்மைக்காலமாக தனி கவனம் செலுத்தி வருகிறது.

அழகிய தமிழ் மகன் படத்தை தொடர்ந்து வில்லனாகவும் களமிறங்கும் விஜய்…..’GOAT’ அப்டேட்!

தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் அம்சங்களுக்கும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ