spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅறக்கட்டளை மோசடி வழக்கில் நடிகை ஜெயலட்சுமி கைது

அறக்கட்டளை மோசடி வழக்கில் நடிகை ஜெயலட்சுமி கைது

-

- Advertisement -
சினேகம் அறக்கட்டளை மோசடி வழக்கில் நடிகை ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டார்.

கடந்த 2022-ம் ஆண்டு சினேகம் பவுண்டேசன் பெயரை பயன்படுத்தி நடிகை ஜெயலட்சுமி பலரிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக பாடல் ஆசிரியர் சினேகன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, தன்மீது சினேகன் அவதூறு பரப்புவதாகக் கூறி நடிகை ஜெயலட்சுமியின் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

we-r-hiring
இது தொடர்பாக இருவரும் மாறி மாறி ஒருவர் மீது மற்றொருவர் புகார் அளித்திருந்தார். இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி திருமங்கலத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், வழக்கு தொடர்பாக விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நடிகை ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டு அழைத்துச் சென்றனர்.

இதற்கு முன்னதாக வழக்கு தொடர்பாக திருமங்கலம் போலீசார் நடிகை ஜெயலட்சுமி வீட்டுக்குச் சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து போலீசார் ஜெயலட்சுமியை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ