- Advertisement -
கோலிவுட் எனும் தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்து, தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக் கொண்டவர் நடிகர் விஜய். நாளைய தீர்ப்பு படத்தில் தொடங்கிய நடிகர் விஜய்யின் திரைப்பயணம், இன்று வரை ஏறுமுகமாக சென்று கொண்டிருக்கிறது. முகம், உடல் எடை, தோற்றம் என அனைத்திற்கும் கேலி, கிண்டல் செய்யப்பட்ட ஒரு இளைஞன், இன்று ஒட்டுமொத்த இந்திய திரையுலமும் கொண்டாடும் தளபதியாக உயர்ந்து நிற்கிறார்.

சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் விஜய் கடந்த சில மாதங்களாக, விஜய் மக்கள் இயக்கம் எனும் பேரில் பொதுமக்களுக்கு தேவையான பல உதவிகளை செய்து வந்தார். பொதுத்தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கி கல்விக்கு உதவி புரிந்தார். மேலும், சென்னை வெள்ளத்தின்போது, தனது ரசிகர் மன்றம் மற்றும் மக்கள் இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு உதவி செய்ய கோரினார். இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார்.




